பணியாளர்கள் தமது சக பணியாளர்களையும், நண்பர்களையும் இனம்கண்டுகொள்வதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றினை எடுத்துள்ளது.
இதன்படி Face Recognition தொழில்நுட்பத்தினைக் கொண்ட அப்பிளிக்கேஷன் ஒன்றினை அந்நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.
ஸ்மார்ட் கைப்பேசியில் குறித்த அப்பிளிக்கேஷன் நிறுவப்பட்ட பின்னர் கைப்பேசியின் கமெராவினை முகத்தின் மீது குவிக்கும்போது அது இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும்.
எவ்வாறெனினும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது பேஸ்புக் பணியாளர்கள் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர் முன்னணி தொழில்நுட்ப இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments