என் கணவன் சந்தோஷை சரண்யாவே வச்சிக்கட்டும் - சுவாரசிய சம்பவம்.! - Manithan24.com

என் கணவன் சந்தோஷை சரண்யாவே வச்சிக்கட்டும் - சுவாரசிய சம்பவம்.!

 

தாலி கட்டிய சில மணி நேரத்தில் தனது கணவனை முன்னாள் காதலிக்கு இளம் பெண் விட்டுக்கொடுத்த சம்பவம் தஞ்சாவூர் அருகே நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே ஒக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த சத்யபிரியா என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிலில் திருமணம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில் சத்யபிரியாவின் தந்தை பிரபாகரன் தனது மகளை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

என் கணவன், சந்தோஷை, சரண்யாவே, வச்சிக்கட்டும்

இதையடுத்து சந்தோசை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தினர். அப்போது சந்தோஷ் மற்றும் சத்திய பிரியா இருவரும் தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், திடீரென காவல் நிலையத்திற்கு வந்த ஒக்கநாடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண், சந்தோஷ் தன்னை காதலித்ததாகவும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்து உள்ளதாகவும் உல்லாசமாக இருந்து இருக்கிறோம் என புகாரை அளித்துள்ளார். மேலும் இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்தார்.

இதைக்கண்ட சத்யபிரியா நான் சந்தோஷை விட்டு பிரிவதாக கூறியுள்ளார். சந்தோஷ் சரண்யாவுடன் செல்லட்டும் என்றும் கூறியிருக்கிறார். இறுதியாக, சத்யபிரியாவை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

தற்போது சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு