வீட்டில் பணக்கஷ்டமா? இந்த வாஸ்துகள் உங்க வீட்ல இருக்கான்னு பாருங்க - Manithan24.com

வீட்டில் பணக்கஷ்டமா? இந்த வாஸ்துகள் உங்க வீட்ல இருக்கான்னு பாருங்க

 

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் முடித்துப்பார் என்றொரு பழமொழி உண்டு. வீட்டைக் கட்டினால் மட்டும் போதாது. அதில் வாழும் நாம் மன மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் சொல்லி வைத்ததுதான் வாஸ்து சாஸ்திரம்.

வீடு கட்டும்போது வாஸ்து பார்த்தால் மட்டும் போதாது. எப்போதுமே கடைபிடிக்க  வேண்டிய சில விஷயங்களும் வாஸ்துவில் உண்டு. அவற்றைக் கடைபிடிப்பதால், நம்மால் வளமான வாழ்க்கையை வாழ முடியும்.வீட்டின் முன்புறம் குழிகள், பள்ளங்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்காது.

வீட்டில், பணக்கஷ்டமா, வாஸ்துகள்
வீட்டில் பணக்கஷ்டமா? இந்த வாஸ்துகள் உங்க வீட்ல இருக்கான்னு பாருங்க

வீட்டின் மெயின் கேட் அருகே கிணறு இருத்தல் கூடாது. அவ்வாறு வீட்டின் முன்புறம் கிணறு இருந்தால், அது மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வீட்டின் முன்பு குப்பைகளைக் கொட்டக்கூடாது. குறிப்பாக, வீட்டின் வாசலுக்கு முன்னால், குப்பைத்தொட்டியை வைக்கக்கூடாது. அது வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும்.

வீட்டின் முன்புறம் சாக்கடை ஏதும் இல்லாமல் இருத்தல் வேண்டாம். வீட்டின் முன் சாக்கடை இருந்தால், பண கஷ்டம் உண்டாகும்.

வீட்டினுடைய மையத்தில் இருக்கும் கதவுக்கு நேராகவோ, மெயின் கேட்டுக்கு நேராகவோ பூஜை அறை இருக்கக்கூடாது. முன் வாசலுக்கு எதிராக இருக்கும் இடத்தில் கடவுள் வசிப்பதில்லை என்ற நம்பிக்கையுண்டு.

வீட்டினுடைய முன் கேட்டில் வெளிப்புறம் மட்டுமே தாழ்ப்பாள் வைக்க வேண்டும். உள்ளே இரந்து கொண்டு வெளிப்புறம் தாழிட்டுக் கொள்ளும்படி வைக்கலாம். ஆனால், உள்புறமாக தாழ்ப்பாள் வைக்கக்கூடாது.

வீட்டின் மெயின் கேட்டுக்கு முன்பு, ஏதேனும் திரிஷ்டி பொம்மை, மந்திரப்படங்கள் ஆகியவற்றை வைக்கலாம். அவை வீட்டுக்குள் தீய சக்திகளை அண்டவிடாமல் காக்கும்.

கற்றாழை, கள்ளி போன்ற தாவரங்கள் எதுவும் வீட்டின் முன்பாகவோ வீட்டைச் சுற்றியோ இருக்கக்கூடாது. அவை மனதுக்குள் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும். தீய சக்திகளை வளர்க்கும். அதோடு வீட்டில் பண பிரச்னை மற்றும் வறுமையை உண்டாக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு