மார்டன் உடையில் வெளுத்து வாங்கும் "வெயில்" பட நடிகை : சூடான ரசிகர்கள் - Manithan24.com

மார்டன் உடையில் வெளுத்து வாங்கும் "வெயில்" பட நடிகை : சூடான ரசிகர்கள்

 

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா நாயர்.
இதனைத்தொடர்ந்து, தொ (ல்) லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோற்கு அஞ் சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் தமிழைக்காட்டிலும், மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, இரண்டு மலையாள படங்களிலும், உட்ரன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் இயக்குநர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து வந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.திருமணத்திற்கு பின்னும் இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில், திருமணமான பின்பு பிரியங்கா நாயர் தனது கணவருடன் சென்னையில் குடியேறினர்.
பின்னர், இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2015 ஆம் ஆண்டு லாரன்ஸிடம் இருந்து விவாகரத்து பெற்று கொண்டார்.
இந்நிலையில், தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் பிரியங்கா நாயரின் சமீபத்திய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், வெயில் படத்தில் நடித்த நடிகையா இது..? என்று வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு