![]() |
அரைகுறை மேலாடையில் நடிகை வாணிகபூர் |
அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வரும் வாணி கபூர் சமீபத்தில் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அதாவது அவர் அணிந்துள்ள மேலாடையில் கடவுள் ராமரை குறிக்கும், ராம் என்ற சொல் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக புகைப்படம் உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வாணிகபூர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் வாணிகபூருக்கு எதிராக ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், வாணிகபூர் அரைகுறை ஆடையில் ராமர் பெயரை குறிப்பிட்டு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Write comments