நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் பதிப்பு பாதுகாப்பானதா.? அறியலாம் வாங்க.!! - Manithan24.com

நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் பதிப்பு பாதுகாப்பானதா.? அறியலாம் வாங்க.!!

 

ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப் பயனர்களின் தகவல்களை திருடுவதற்கு இலகுவான வழி ஒன்று இருப்பதை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் கண்டறிந்திருந்தது.

இதன்படி MP4 வகை வீடியோ ஒன்றினை வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பி அவ் வீடியோவை பயனர் பிளே செய்யும்போது தகவல்களை திருட முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

Tamil News, Lankasri News, Lankasri Tamil News, Apps News, Whatsapp

இதனை அடுத்து குறித்த பிரச்னைக்கு தீர்வளிக்கப்பட்ட புதிய வாட்ஸ் ஆப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அன்ரோயிட் பயனர்கள் 2.19.274 பதிப்பினையும், iOS பயனர்கள் 2.19.100 பதிப்பினையும் அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் உங்கள் வாட்ஸ் ஆப் பதிப்பு பாதுகாப்பனதா என்பதை அறிந்துகொள்ள முடியும். iOS பயர்கள் வாட்ஸ் ஆப்பினை திறந்து Settings பகுதிக்கு சென்று Help என்பதை தெரிவு செய்யும்போது வாட்ஸ் ஆப் பதிப்பு இலக்கம் காண்பிக்கப்படும்.

அதேபோன்று அன்ரோயிட் பயனர்கள் வாட்ஸ் ஆப்பினுள் Settings பகுதிக்கு சென்று Help என்பதை கிளிக் செய்து App Info இனை தெரிவு செய்யும்போது வாட்ஸ் ஆப் பதிப்பு இலக்கம் காண்பிக்கப்படும்.

இவ் இலக்கங்கள் மேற்தரப்பட்டவற்றிலும் குறைவாக இருப்பின் உங்கள் வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அற்றதாகும். எனவே உடனடியாக அப்டேட் செய்கொள்ள வேண்டும்

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு