ஆவிகள் நடமாடும் தீவில் தீரன் படம் இரவில் எடுக்கப்பட்டது எப்படி..? - Manithan24.com

ஆவிகள் நடமாடும் தீவில் தீரன் படம் இரவில் எடுக்கப்பட்டது எப்படி..?

 

தீரன் திரைப்படம் பார்த்த எல்லோருக்கும் "தோ கிலோ மீட்டர்" என்ற வசனத்தை மறக்கவே முடியாது. பல கி.மீ கடந்து ஹீரோவின் குழுவை ஒரு தாத்தா ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்வார் அங்குச் சென்றால் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் அந்த கிராமத்தின் பெயர் என்ன தெரியுமா?
குல்தாரா கிராமம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள குல்தாரா கிராமம் தான் இது. இந்த கிராமம் பேய் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. ஆம் அந்த பேய் கிராமத்தில் தான் இரவு பகலாக அந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.


​13ம் நூற்றாண்டு

13ம் நூற்றாண்டில் துவக்கத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் பாலி என்ற பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது தான் இந்த நகரம் முதலில் சிறு கூட்டமாக இருந்த இவர்கள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானார்கள்.

கோவில்

இந்நிலையில் 19ம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் அமைத்து அந்த அம்மன் கோவிலைச் சுற்றி நகர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரே நாள் இரவில் அந்த கிராமத்தில் வாழ்ந்த 500 பேரும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

எங்குச் சென்றார்கள்?

இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் எல்லாம் எங்குச் சென்றார்கள். ஏன் சென்றார்கள் என்ற எந்த காரணமும் யாருக்குத் தெரியவில்லை. இவர்கள் காணாமல் போனதற்குப் பலர் பல்வேறு காரணங்களைச் சொல்லி வருகின்றனர் அதைப் பற்றி இங்கே காணலாம்.

சாமி குற்றம்

இதற்கு மிக அதிகமாகச் சொல்லப்படும் காரணம் அந்த கிராம மக்கள் அங்குள்ள கோவில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மனிற்கு சாமி குற்றம் செய்துவிட்டதாகவும் அதனால் அந்த கிராமத்திற்குத் தீங்கு ஏற்பட்டு கடவுள் சக்தியை அந்த கிராமம் இழந்துவிட்டதாகவும், பேய்கள் குடிபுகுந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இரவு நேரங்களில் அந்த கிராமங்களில் தங்கும் பலருக்குப் பேய் பிடிப்பது, அல்லது அவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்வது எனப் பல விஷயங்களை செய்துள்ளார்களாம்.

வறட்சி

வேறு ஒரு காரணமாக வறட்சியும் சொல்லப்படுகிறது. அந்த கிராம மக்கள் அந்த கிராமத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஆற்று நீர் தான் இவர்களின் பிரதான குடிநீர்த் தேவையாக இருந்தது. அந்த ஆறு வறண்டுபோனதால் அங்குள்ள மக்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து முடிவு செய்து இரவோடு இரவாக வேறு ஒரு இடத்திற்குக் குடிபெயர்ந்து போய்விட்டனர் எனவும் கூறப்படுகிறது.

பூகம்பம்

2017ம் ஆண்டு அம்மாநில அமைச்சர் ஒருவர் இந்த கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய போது இந்த கிராமம் பூகம்பத்தால் அழிந்து போனதாகப் பேசினார். மக்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஒரு பேச்சும் மக்கள் மத்தியிலிருந்து வருகிறது. ஆனால் அப்படி அந்த பகுதியில் பூகம்பம் வந்ததற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை.

பேய்

இந்த கிராமத்தில் பேய் தான் வசிக்கிறது எனப் பல மக்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். இதனால் இந்த ஊருக்குள் யாரும் இரவு தனியாக தங்க சுற்றி உள்ள ஊர் மக்கள் அனுமதிப்பதில்லை. அவ்வப்போது இதைத் தவிர்க்கச் சிலர் அந்த கிராமத்திலேயே குடியேற எண்ணி அந்த கிராமத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களும் பேய்கள் நடமாட்டம் இந்த கிராமத்தில் இருப்பதாகக் கூறி அவர்கள் தலைதெறிக்க ஒடிவிடுகின்றனர்.

சுற்றுலா தளம்

பகல் நேரங்களில் அந்த கிராமம் ஒரு சுற்றுலா தளமாக மாறிவிட்டது ராஜஸ்தான் அரசே அந்த கிராமத்தைச் சுற்றி வேறு வழியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதியை வழங்கி வருகிறது. ஆனால் இந்த கிராமத்தைச் சுற்றி ஒரு கதவு வைத்துள்ளனர். அந்த கதவை மாலை 6 மணிக்கு அவர்கள் அடைத்து விடுகின்றனர். அதன் பின்னர் யாரும் அந்த கிராமத்திற்குள் விடியும் வரை செல்வது இல்லை.

பாதுகாப்புடன் அனுமதி

அப்படி யாரேனும் அந்த கிராமத்திற்குள் செல்ல வேண்டுமானாலும் அரசிடம் முன்பே அனுமதி பெற்று உரியப் பாதுகாப்புகளுடன் அதிக நபர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அப்படியான அனுமதி பெற்றுத் தான் தீரன் திரைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீராத மர்மம்

இந்த கிராமத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் அங்குத் தங்குபவர்களுக்கு அமானுஷ்யமான அனுபவங்கள் கிடைக்கிறது. இந்த கிராமத்திலிருந்த மக்கள் ஏன் வெளியேறினர் அல்லது காணாமல் போனார்கள் என்பது எல்லாம் இன்று வரை மர்மம் தான்.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு