தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நீபா. சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இவர் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்து வந்தார். நீபா சமீபத்தில் கவர்ச்சியாக நடித்ததற்கு அவர் கூறிய கருத்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலன் திரைப்படத்தில் வடிவேலு ஜோடியாக நீபா நடித்திருந்தார். பூங்கொடி என்ற கதாபாத்திரம் நகைச்சுவையுடன் வந்ததால் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்நிலையில் நீபா தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு தந்தையின் உடல் நிலை தான் காரணம் எனவும் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
அது முற்றிலும் தவறு. உடம்பை காட்டுகிறவர்கள் கெட்டவர்கள் இல்லை, அதேபோல் முழுவதும் மூடிக் கொண்டாலும் நல்லவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக நடிகை மும்தாஜ் சினிமாவில் கிளாமராக நடித்து இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது உடை மதிக்கத் தக்கதாகவே இருந்தது.
ஆகையால் கவர்ச்சி நடிகைகளில் யாரும் விருப்பப்பட்டு கவர்ச்சி காட்டுவது இல்லை எனவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அதை ஏற்று நடிக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments