ஜப்பான் நாட்டில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஒரு பொம்மைக்குள் ஒரு சிறுமியின் ஆவியின் புகுந்திருக்கிறது எனப் பரவலாகப் பேசப்படுகிறது? யார் அந்த சிறுமி, அந்த பொம்மைக்கும் அந்த சிறுமிக்கும் என்ன சம்மந்தம்,
சிறுமி ஓகிகு
1918ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த எழுச்சி சுசூகி என்ற 18 வயது இளைஞன் வெளியூருக்குச் சென்று திரும்பும்போது தனது 3 வயது தங்கை ஓகிகுவிற்கு விளையாடுவதற்காக ஒரு பொம்மையை வாங்கி வந்துள்ளான்.
அந்த பொம்மையைத் தனது தங்கை ஓகிகுவிற்கு பரிசளித்தபோது தான் அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். பாப் கட்டிங், பாரம்பரிய ஜப்பானிய உடை, வித்தியாசமான ஜப்பானிய முகத்தோற்றத்துடன் கூடிய இந்த பொம்மை ஓகிகுவிற்கு மிகவும் பிடித்துப் போனது.
அழகிய பொம்மை
அன்று முதல் அவள் எங்குச் சென்றாலும் அந்த பொம்மையுடனேயே செல்ல ஆரம்பித்தால் ஓகிகு. அந்த பொம்மையை தன் தோழி போலவே பார்த்தாள் ஓகிகு. தான் உணவு சாப்பிடும்போது, குளிக்கும்போது என எல்லா நேரங்களிலும் அந்த பொம்மை அவளுடனேயே இருந்தது.
ஓகிகு மரணம்
இந்நிலையில் ஒரு நாள் ஒகிகுவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உடல் நிலை மோசமாகி ஒகிகு இந்த உலகத்தை விட்டே மறைந்துவிட்டாள். இந்நிலையில் அவரது பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சுசூகி ஓகிகு பயன்படுத்திய இந்த பொம்மை அவளது நினைவாக குடும்பத்தினர் ஒரு இடத்தில் வைத்து அந்த பொம்மைக்கு ஓகிகு எனப் பெயரிட்டனர். மேலும் அந்த பொம்மையை இறந்துபோன ஓகிகுவாக நினைத்து வழிபடத் துவங்கினர்.
வளரும் தலைமுடி
இப்படி அவர்கள் தினமும் வழிபாடு நடத்தி வந்த சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த பொம்மையின் தலை முடி வளர்வதை அவர்கள் உணர்ந்தனர். இந்த பொம்மை வாங்கும்போது பாப் கட்டிங் உடன் இருந்த இந்த பொம்மையின் தலைமுடி பொம்மையின் முட்டி வரை வளர்ந்திருந்ததை உணர்ந்தனர்.
ஓகிகு ஆவி
இதையடுத்து சுசூகி மற்றும் குடும்பத்தினர். அந்த பொம்மைக்குள் ஓகிகு வாழ்ந்து வருவதாகக் கருதினர். ஓகிகுவின் ஆவி அந்த பொம்மைக்குள் புகுந்து நம்முடனேயே வந்துவந்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தனர்.
தலை முடி சோதனை
ஒரு கட்டத்தில் இந்த தகவல் வெளியே கசிய இவர்கள் சொல்வது உண்மைதானா எனச் சந்தேகம் பலருக்கு வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பொம்மையின் முடியை வெட்டி ஆய்விற்குக் கொண்டு சென்ற போது அது ஒரு மனிதரின் முடி என்றும், பொம்மையின் முடி அல்லது என்பது தெரியவந்தது.
கண்டுபிடிக்க முடியாத மர்மம்
இது எப்படி சாத்தியம் பொம்மைக்கு எப்படி மனித முடிவளரும் எனப் பல மர்மங்கள் இன்றும் தீர்க்க முடியாமல் உள்ளது. இதன் பின்னால் உள்ள அறிவியலைக் கண்டுபிடிக்கப் பலர் முயற்சி செய்தும் முடியாமலேயே போனது தான் மிச்சம். இன்றும் அந்த பொம்மைக்கு முடி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அது அவ்வப்போது வெட்டப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.
No comments:
Write comments